மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட புளிந்தீவு
தெற்கு 18ம் வட்டார பகுதியில் 18ம் வட்டார மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் முன்னெடுக்கின்ற
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் இன்று நேரில்
சென்று பார்வையிட்டார்
.
மட்டக்களப்பு மாநகர முதல்வரின் சிந்தனைக்கு
அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர அபிவிருத்திக்காக நிதிகள்
ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு மாநகரை
முதன்மை படுத்தும் பல வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அமைய மட்டக்களப்பு புளிந்தீவு
தெற்கு 18ம் வட்டார
உறுப்பினர் அந்தோனி கிருரஜன் வேண்டுகோளுக்கு
இணங்க மாநகர முதல்வரின் பணிப்புரையின் கீழ் மாநகர சபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மட்டக்களப்பு
புளிந்தீவு தெற்கு வாவிக்கரை வீதி 02 ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு
முன்னுள்ள பிரதான வடிகான்,மாணிக்கம்
சதுக்கம் 01 ஆம் குறுக்கு வீதி மற்றும் மாணிக்க சதுக்கம் பிரதான வீதி ஆகியன புனரனைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
.
குறித்த அபிவிருத்தித் திட்டங்களை மாநகர
முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டடார்