LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 9, 2018

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்


காற்றுக் குமிழியாகவே.

மேலும் அந்தக் கனவை
நாட்பது வருடங்களாக எனக்குத் தெரியும்
அதன் முகம்
அதன் நிறம்
எனதறையின் சுவரெங்கும்
இன்னும் பழைய மாதிரியே
பிரத்தியேகமான வடிவங்களோடு இருக்கின்றன
மேலும் அதன் தன்மை குறித்தும்
அதன் பரம்பரை குறித்தும்
இவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது
கண்கள் பச்சை நிறமுடையன
சில நேரங்களில் மட்டும்
நீல நிறமாக மாறக் கூடியன
தோல்கள் மேகத்தைப் போல
மென்மை 
உடல் கடலைப் போல் 
எல்லையுடையது
அந்தக் கனவு
ஆதியிலிருந்து வானத்தின் மற்றும்
பூமியின் மையப்புள்ளியில்
காற்றுக் குமிழியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.


பிறக்காத மனிதர்களின் உரையாடல்.

நான் மேகங்களோடு விளையாடிக் கொணடிருக்கிறேன்
என்னையும் ஒரு வாசகனையும்
ஒரு இடத்தில் சந்திக்க வைக்கிறது
அங்கு மிக அருகாமையில் பயணம் செய்யும் காற்று
நாங்கள் சந்தித்தித்துக் கொண்டோம்
உரையாடல் மிக இரகசியமாக
வைக்கப்பட்டுள்ளது
அதன் ஒலி ஒரு முத்தத்தைவிட மென்மையானது .
சூரியன் வழக்கத்தை மீறி
குளிர்மையை அங்கு பரப்பியது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7