ள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.
நிவாரண நடவடிக்கைகளை உரிய பிரதேச செயலாளர்களுக்கு மதிப்பீடு செய்து அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாக நேற்று (14) புதன் கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கூறிய அவர் வெள்ள அனர்த்தம் மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், சேருவில, தம்பலகாமம் போன்ற பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக குறித்த பிரதேச செயலாளர்களுக்கு பாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளோம். உரியவாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக அதற்கான நிதியினை பெற்றுக் கொடுத்து நிவாரணங்களை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
அச்சுதன்