நுண்கலைத்துறையில் நடைபெற்ற நொண்டி நாடகம் தென்மோடிக் கூத்துக்கான சட்டங் கொடுத்தல் விழா
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் வருடாந்தம் நடைபெறும் ஆற்றுகையினூடாகக் கூத்தரங்கைக் கற்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரம்சமாக இவ்வருடம் நொண்டி நாடகம் தென்மோடிக் கூத்திற்கான சட்டங் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று (02.11.2018) வெள்ளிக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழக மூதவைக் கட்டிடத்தின் முன்றலில் நடைபெற்றது.
நுண்கலைத்துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலை பண்பாட்டுப் பீடாதிபதி திரு.மு.ரவி அவர்களும், கௌரவ அதிதியாக கலை பண்பாட்டுப் பீட அவை உறுப்பினர் திரு.அ.சுகுமாரன் அவர்களும் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், கல்வி சாரா அணியினரும், மாணவர்களும் பங்குபற்றினார்கள்.
இக்கூத்துச் செயற்பாடானது துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் அவர்களின் பொறுப்பிலும், இணைப்பாக்கத்திலும் முன்னெடுக்கப்படும் அதேவேளை இக்கூத்தின் அண்ணாவியாராக திரு.ப.கதிர்காமநாதன் அவர்களும், ஏடு பார்ப்போராக திரு.சி.சுந்தரலிங்கம், திரு.இரா.டிலக்ஸன் ஆகியோரும் பங்குபற்றுகின்றார்கள