சில காலங்களுக்கு முன்னர் இந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பெண்களுக்கு 40% இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரோஹன் குப்தா, “ராகுல் காந்தியின் விருப்பத்தை அமுல்படுத்தக் கொஞ்ச காலம் ஆகும் என்றாலும் மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப்படும்” என்று கூறினார்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மீது மக்களிடம் அதிருப்தி நிலவுவதால் இந்தத் தேர்தலில் கடும் சவாலை எதிர்கொண்டிருக்கும் பாஜக, இவ்விஷயத்தில் காங்கிரஸைச் சீண்டிவருகிறது. “பெண் வேட்பாளர்களுக்குக் காங்கிரஸ் வாய்ப்பளிக்குமோ இல்லையோ தெரியாது. நாங்கள் எப்போதுமே பெண்களுக்கு வாய்ப்பளித்துவருகிறோம்” என்கிறார் பாஜகவின் கோட்டா மாவட்டத் தலைவர் ஜெய்வீர் சிங்.