யாழ். கோண்டாவில் சிவபூமி அறக்கட்டளையின் அனுசரனையோடு திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினால் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் விசேட தேவையுடைய சிறுவர் உளவிருத்திப் பாடசாலையும், ஆலயத்திற்கான யாத்திரிகர் மடமும் விரைவில் பூர்த்தியாகவுள்ளது.
விசேட தேவையுடைய சிறுவர் உளவிருத்திப் பாடசாலையில் தமது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், அதற்கான விண்ணப்பப் படிவத்தினை 12.11.2018ஆம் திகதியிலிருந்து திருகோணமலை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை பணிமனையில் பெற்றுக் கொள்ளலாம். கட்டிட வேலைகள் பூர்த்தியானதும் பாடசாலை ஆரம்பமாகும் திகதியும் மேலதிக விபரங்களும் அறியத் தரப்படும்.
கோணேஸ்வர ஆலயத்தினால் கடந்த 8 வருடங்களாக தாய் தந்தையரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக மாதாந்தம் உதவி நிதி வழங்கப்படுவதை எல்லோரும் அறிவீர்கள். அதன் நீட்சியாக உளவிருத்தி குன்றிய / விசேட தேவையுடைய குழந்தைகளின் நன்மை கருதி, இலாப நோக்கற்ற சமூக சேவையாக இப் பாடசாலை ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைபனி மனையுடன் தொடர்புகொள்ளலாம் (0262226688),(0772991739)