* நான் நாட்டை நேசிப்பதால் நாட்டை காப்பாற்ற அந்த பொறுப்பை ஏற்றேன்... இன்னும் சில காலம் இருந்தால் யூ என் பி நாட்டை நாசமாக்கியிருக்கும்...
* பொதுத் தேர்தல் வரை இடைக்கால அரசே ஏற்றோம்.. கடந்த அரசு தேர்தல்களை பிற்போட்டது..
* இலங்கை வரலாற்றில் தேர்தலை வேண்டாம் என்று சொன்ன ஒரே சந்தர்ப்பம் இது தான் .. யூ என் பி மற்றும் ஜே வீ பீ இதனை செய்கின்றன...
* பிரதமர் பதவியை நான் ஏற்றவுடன் நாட்டில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது...
* சபாநாயகர் அரசியலமைப்புக்கு மீறி செயற்பட்டார்... பிரதமரை நியமிப்பது ஜனாதிபதி தான்? அரசியலமைப்பு மற்றும் அதிகாரம் எங்கே இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இப்படி நடக்கிறீர்கள் சபாநாயகரே? அந்த கதிரையை தவறாக பயன்படுத்த வேண்டாம்...
* தீர்ப்பை மக்களிடம் விடுங்கள்... தேர்தலுக்கு செல்ல ஜே வீ பீ தயார் என சொல்கிறது .. யூ என் பி என்ன சொல்கிறது? பொதுத் தேர்தலே உடனடி தேவை..
* தோட்டத்து தொழிலாளர்1000 ரூபா சம்பள பிரச்சினை உள்ளது.. எரிபொருள் விலைகளை குறைக்க வேண்டும்.. இன்றிரவு எரிபொருள் விலைகளை குறைக்கிறோம்..இப்படி பல பிரச்சினைகளை முடிக்க வேண்டும்...
* சபாநாயகர் நீங்கள் சுயாதீனமாக இருக்க வேண்டும்... கட்சி அல்லது மேற்குலக நாடுகளின் நட்பிலிருந்து நீங்கள் நீங்க வேண்டும்...