இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையளருமான க.குருநாதன் காணிச்சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை வழங்கினார். அகம் நிநுவன உதவி இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கட்டைபறிச்சான் தெற்குப்பிரிவு. அம்மன்நகர், அறபா நகர் ,கணேசபுரம்,சந்தனவெட்டு என பல கிராமங்கள் யுத்த பாதிப்பில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளாகும்.இம்மக்களின் வாழ்விடங்கள், வயல் காணிகளுக்கான ஆவணங்களுக்காக விண்ணப்பித்து 10 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்று வரைஆவணங்கள் வந்து சேரவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்திப் பணிகளில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. தேவையற்ற காணி பிணக்ககளுக்கும் ஆளாக வேண்டி வருகின்றன.என இங்கு பங்கு பற்றிய பொது அமைப்புக்கள் முறையிட்டனர்
காணிக்கான விசாரணைகள் மூன்று தடவைக்குமேல் நடைபெற்றன. பல முறை பிரதேச செயலகங்களுக்கு அலைவது தான் மிச்சமாகவுள்ளன. காணி ஆவணங்கள் வந்து சேர்வதாக இல்லை எனவும் கூட்டத்தில் கவலை வெளியட்டனர்.
.இது தொடர்பாகபிரதேச செயலக அதிகாரிகள் கருத்து தெரிவிக்கும் போது காணி க்கான விசாரணைகள் யாவும் முடித்து அனுமதிக்காக மாகாண உதவி ஆணையாளருக்கு அனுப்பிவைத்து காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
(அச்சுதன்)