சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்காக வடசென்னை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 3 சக்கர சைக்கிள்கள் மற்றும் பிளாஸ்டிக் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தப்பட்டது.
விழாவில் மத்திய சென்னை எம்.பி. விஜயகுமார் முன்னிலை வகிக்க அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் பங்கேற்று 3 சக்கர சைக்கிள்கள் மற்றும் பிளாஸ்டிக் கூடைகளை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
அபோது அவர் நிருபர்களிடம் பேசும் போது
தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை வழங்கி ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டு வருகின்றனர் எனவும்
இனிமேல் தினகரனால் அ.தி.மு.க.வில் ஸ்லீப்பர் செல்களை உருவாக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு இன்றைய நிலையில் தினகரனின் ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் எங்களுடன் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும்
20 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைதேர்தலில் நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.
அம்மா ஜெயலலிதாவினால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தினகரனுக்கு அ.தி.மு.க.வை பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என்றும் உறுதிபட தெரிவித்தார்.