மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி
தலைமையகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து
வருவதாக தெரிவித்தனர்.
தீபாவளி தினமான நேற்றைய தினம்
விடுமுறை நாளாக இருந்த காரணத்தினால் அரச திணைக்களங்கள் விடுமுறை
வழங்கியுள்ள நிலையில் நேற்றைய தினம் இந்த
தீவிபத்து இடம்பெற்றதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீவிபத்து மின்னொழுக்கு காரணமாக இடம்பெற்றுள்ளதா
அல்லது நாசகார செயலால் இடம்பெற்றுள்ளதா என மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பிரிவு அதிகாரிகாரிகளும்
, மட்டக்களப்பு பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.