
பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பிரெக்சிற்றுக்கு பின்னரான உறவு தொடர்பான அரசியல் பிரகடனம் கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டதன் பின்னர் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வரைவு அரசியல் கட்டமைப்பிற்கான ஐரோப்பிய ஆணையத்துடனான உடன்பாடு சரியான ஒப்பந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
பிரித்தானிய மக்கள் இதை தீர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், பிரகாசமான எதிர்காலத்திற்கு எங்களை கொண்டுசெல்லும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் விரும்பும் அத்தகைய ஒப்பந்தம் எம்பிடியில் தான் உள்ளது, அதை மக்களுக்கு வழங்குவதற்கு நான் உறுதியாக உள்ளேன் என தெரசா மே கூறினார்.
மேலும் ஞாயிறன்று ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்திற்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்யும் பொறுப்பு, 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன் ஸ்பெயின் பிரதமருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஜிப்ரால்டர் உட்பட பிரித்தானியாவின் முழு குடும்பத்திற்கும் தகுந்த உடன்பாட்டை வழங்குவதற்கு தம்மால் நிச்சயமாக முடியுமெனவும் பிரதமர் தெரசா மே நம்பிக்கை வெளியிட்டார்.
