skip to main
|
skip to sidebar
மாவோயிஸ்டுகள் போலீஸில் சரண்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 62 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் போலீஸில் சரணடைந்துள்ளனர். மாவோயிஸ்டுகள் சரண் அடைய வைக்க மாநில அரசு முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 51 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த செயலை பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறையினர் வரவேற்று வருகின்றனர். ஆனாலும் சதீஸ்கர் மாநிலம் நெக்சலைட்களின் பெரும் கோட்டையாக கருதப்படுகின்றது