
நான் மூங்கில் குழல்
வெளிப்புறப் பார்வைக்கு
செம்மஞ்சள் வர்ண பகட்டு மேனியுடன்
தகதகத்து மின்னுகிறேன்
அடிக்கடி உங்களை கிறங்கவைத்து
வசீகரம் செய்கிறேன்
ஆனால் எனக்குள் திட்டுத் திட்டாக
அழுக்காறுகள் அடைத்திருக்கின்றன
அது என்னை வழி கேட்டின்பால்
அழைத்துச் செல்கிறது
அதனால் நீ்ங்கள் என்னை நிராகரிக்கும்
சாத்தியமும் நிலுவுகின்றன
உடன் என் மனசை
அடைத்திருக்கும் திட்டுகளை
ஆத்மீகத்தினால் மிக நிதனமாக
செதுக்கி செப்பனிடுகிறேன்
பின்னர் இடைக்கிடை
சிறு சிறு துழைகளிடுகிறேன்
இப்போது காற்று வந்து
என்னை மொழி பெயர்க்கிறது
நான் மூச்சு விடுகையில்
உங்களது மனதை வருடக்கூடிய
மெல்லிசை உருவாகிறது
அது என் வாழ்வின் மீதான
இனிமையான பாடல்களை பாடித் தீர்க்கிறது
இனி நீங்களும் தாராளமாக
என்னை வாசிக்கலாம்
உங்களில் அனேகர் மூங்கில்
ஆனால் யாருமே காற்றை அழைப்பதில்லை
உங்களை மொழி பெயர்க்க
0
ஜமீல்
