மேற்குலகம் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே ரஷ்யா மீது தடைகளை விதித்ததாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) ஜேர்மன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்ற ஜேர்மன் – உக்ரேன் வணிக மன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர் “தொழிற்துறை பிரதிநிதிகள் அதிகமானவர்கள் வெளிப்படையாக ரஷ்யாவுடன் நல்ல உறவுகளை விரும்புகின்றனர் அத்துடன் அவர்கள் பொருளாதாரத் தடைகளை பற்றியும் பேசுகின்றனர்.
நாங்கள் மிகவும் அடிப்படையான ஒன்றைப் பற்றி பேசுகிறோம்: ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை நாங்கள் விதிக்க மாட்டோம், மாறாக பிராந்திய நிலைமை அந்தந்த நாடுகளை ரஷ்யாவிற்கு நெருக்கமாக வைத்திருந்தாலும் கூட, தங்கள் சொந்த அபிவிருத்திக்கு உரிமை உண்டு என்பதை தெளிவுபடுத்துவதற்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கிறோம்.
இவை சர்வதேச சட்டத்தின் கொள்கைகளாக இருக்கின்றன” என்று அவர் கூறினார். இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் எதிர்வரும் G20 உச்சிமாநாட்டில் அஸோவ் கடல் பிராந்திய பிரச்சினை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேனுடனான தீவிரநிலையை அடுத்து பல ஐரோப்பிய ஒன்றியத்தின் பலம்வாய்ந்த நாடுகள் ரஷ்யா மீது அதிகமான பொருளாதாரத் தடைகள் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. எனினும், பிளவுபட்ட கூட்டணி உடனடியாக செயற்படப் போவதில்லை என்று இராஜதந்திர ஆதாரங்