நம்பியே...
நம் பயணம் நம்பி தொடர்கிறது....
நரகாசுரர்கள் இன்னும் சாகவில்லை!
நம்மோடு வாழ்கிறார்கள்
நம்பி வாக்களித்த எம்.பி மாரை
நாட்கணக்கில் ஊருக்குள் காணவில்லை
நாதியற்று எம் மக்கள்
நடுத்தெருவில் நிற்கிறார்கள்
நடுச்சாமம் கண் விழித்தால்
நாட்டு நிலை மாறுகிறது!
நள்ளிரவில் எம்.பிக்கள்
நல்ல விலை போகிறார்கள்
நல் அமைச்சும் பெறுகிறார்கள்
நல்லாட்சி பொல்லாட்சியென்று
நாக்குழியான் புழுக்களும்
நாக்கு நீட்டிப் பேசியே
நல்ல பேரெடுக்கப் பார்க்கிறது
நரகாசுரன் அழிந்த நாளை
நல் தீபாவளி என்கிறோம்
நமக்குள்ளே நடமாடும் பல
நரகாசுரர்கள் செத்தொழிந்து போகும்
நன்னாள் என்னாளோ அந்நாளே
நமக்கெல்லாம் நல் தீபாவளி