தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் வழிகாட்டலில் பிரதி அதிபர் ஏ.எல்.கபீர் மேற்பார்வையில் நூலகப் பொறுப்பாசிரியர் எம்.எல்.எம்.இப்ராஹிம் மதனி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையிலுள்ள ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டதோடு ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள் நூலக ஊழியர்கள் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நடைபெற்று முடிந்த போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.