ஜனாதிபதியின் இந்த தற்கொலைக்கு சமனான அரசியல் நகர்வுகள் சென்றிருக்கும் தூரத்தை பார்த்தால்
இதனை தோற்கடிப்பது இலகுவான சாத்தியமான காரியமாக தோன்றவில்லை.
ஜனாதிபதியால் இந்நாட்டின் மீது போடப்பட்டுள்ள பாரிய அழிவை ஏற்படுத்தும் அணுகுண்டு இறுதிவரை வெடித்து அழிவை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். இது ஏற்படுத்தும் அழிவு நாம் கற்பனையும் செய்து பார்க்க முடியாதளவு பாரியது.
இந்த அழிவு ஒரு யுகத்தின் முடிவுக்கே காரணமாகிவிடும்.
ரணில், மகிந்த இவர்களை மட்டுமல்ல
யுகத்தின் அனைத்து தலைவர்களும்,
கெட்டு நாறிப்போயுள்ள அரச நிறுவனங்கள், அரச கட்டமைப்புக்கள் முறைகள்,யாப்பு நீதி ஒழுங்கமைப்பு
அனைத்தும் நாசமாகிப் போக இது காரணமாகிவிடும்.
நாட்டின் முழுப் பொருளாதாரமும் நஷ்டமடைந்து நாசமாகிப் போக காரணமாகிவிடும்.
நாட்டின் அப்பாவி மக்களை கூட சாகாமல் சாகடித்துக்கொண்டேயிருக்கும்.
இந் நாட்டின் புதிய யுகத்தை இந்த பேரழிவின் பின்னர் எஞ்சியிருக்கும்
சாம்பல் தூசிகள் இடிபாடுகளிலிருந்தே
புதிதாக அனைத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும். முழு நாட்டையும்
புத்தம்புதிதாக ஆரம்பித்து கட்டியெழுப்ப வேண்டியிருக்கும்.
பொதுமக்கள் பலமானவர்களாக தன்னம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால் பாரிய அழிவுகளின் பின்னர்
ஜப்பானும் ஜேர்மனும் அந்த அழிவையே
தம்மை,தமது நாட்டை கட்டியெழுப்ப சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டார்களோ அவ்வாறு பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.(ந)
(கிண்ணியாச் செய்தியாளர்)
Attachments area
Akoob Nasbullah