மட்டக்களப்பு
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பல தாழ்நில பகுதிகள் வெள்ளநீரினால் மூழ்கியுள்ள நிலையில் இதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதன்கீழ் மாநகர முதல்வரின் வழிகாட்டலுக்கு அமைய மட்டக்களப்பு புதூர் , இருதயபுரம் , ஊறணி ஆகிய பகுதிகளில் வடிந்தோடும்
வெள்ளநீரினை கட்டுபடுத்தும் வகையில் வடிகான்
தோண்டும் நடவடிக்கையினை இன்று முன்னெடுக்கப்பட்டன
பெக்கோ இயந்திரம் கொண்டு தோண்டப்படும் வடிகான்களை மாநகர முதல்வர் ,தியாகராஜா சரவணபவன் , மாநகர
சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் எஸ் .ராஜ்குமார் மாநகர சபையின் அனர்த்த முன்னாயத்த குழு தலைவரும் 20ஆம்
வட்டார உறுப்பினர் டி .சிவானந்தராஜா , 20ஆம் வட்டார உறுப்பினர் அசோக் மற்றும் மாநகர
சபையின் அனர்த்த முன்னாயத்த குழு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்