LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 19, 2018

முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் - கயோருல் ஹசன் ரிஸ்வி



அயோத்தி பிரச்சினையில் நீதி மன்றத்துக்கு வெளியே தீர்வு காண வேண்டும். இதில் முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் கயோருல் ஹசன் ரிஸ்வி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதரப் புக்கு சாதகமாகவும் மறுதரப் புக்கு பாதகமாகவும் அமையக் கூடும். எனவே இந்த பிரச்சினை யில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண்பது சிறந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
விஎச்பி செயல் தலைவர் அலோக் குமாரை விரைவில் சந்தித்துப் பேச உள்ளேன். இதேபோல சன்னி வக்பு வாரிய நிர்வாகிகள், இஸ்லாமிய அறிஞர் களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அயோத்தி பிரச் சினையில் முஸ்லிம்கள் பெருந் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மெக்கா, மெதினா முஸ்லிம் களின் புனிதத் தலங்களாகும். இது போல அயோத்தி இந்துக்களின் புனித பூமியாகும். அந்த கோணத் தில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். நாட்டின் நலன் கருதி இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத் கூறியபோது, “முத்தலாக் விவா கரத்துக்கு தடை விதிக்க மத்திய அரசு அவசர சட்டத்தைப் பிறப் பித்தது. இதேபோல அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டத்தை பிறப்பிக்காதது ஏன்?

ராமர் கோயில் கட்ட மத்திய அரசுக் கும் உத்தர பிரதேச அரசுக்கும் ஆர்வம் இல்லை. இந்த விவ காரத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டுமே பாஜக பயன்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

இதன் பின்னணி கீழ் வருமாறு:

அயோத்தி பிரச்சினை என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சினையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தர பிரதேசம், அயோத்தியில் உள்ளது. இந்த இடம் இந்து மதக் கடவுளான இராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் 1949ல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் ரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டன.

1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின. இப்பிரச்சனை பாரதீய ஜனதா கட்சியால் (பாஜக) அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.

1989ல் அலஹாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின. மசூதியை இடித்து விட்டு அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர்.

இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன. இந்த பிரச்சனை பாஜக கட்சியின் அரசியல் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.

1993ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம்

அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக உத்தர பிரதேச உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

2010ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும் இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ராம ஜன்ம பூமி இயக்கத்துக்கும் (சங் பரிவார் அமைப்பு), ஒரு பகுதி சுன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி நிர்மோஹி அகோரா என்ற இந்து அமைப்பிற்கும் வழங்கப்பட்டன. இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இத்தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷ்வ இந்து பரிஷத், மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இரண்டும் அறிவித்தன.

இந்து மகாசபை செய்த மேல் முறையீட்டு மனுவைப் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், மே 2011ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இதுவரை ஒத்தி வைத்துள்ளது.







 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7