வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இரு பிரதான கட்சிகளிற்கிடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியே இவ்வளவு முரண்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. இரு பிரதான கட்சிகளிற்கிடையில் எற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான விதத்தில் கையாளவில்லை.
இதனைவிடுத்து வெறுமனே ஐனநாயகம் மீறப்பட்டிருப்பதாகவும், அரசியலமைப்பு மீறப்பட்டிருக்கிறது என்று கூறிக்கொண்டு அதிகாரப்போட்டியில் ஈடுபட்டிருக்கும் ஒரு கட்சியை அல்லது நபரைக் காப்பாற்றும் செயலையே கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இன்று அரியதொரு சந்தர்ப்பத்தை தவறவிட்டிருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்துடன் இணைந்திருந்த எதிர்க்கட்சித் தலைவரும், அவர் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் காத்திரமாக செயற்பட தவறியிருக்கிறார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.