பிரதமர் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானியின் வீட்டுக்கு நேரடியாக சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்.
அத்தோடு தனது டுவிட்டர் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானிஜி ஆற்றிய பங்களிப்பு நினைவுச்சின்னமாக ஜொலிக்கின்றது என்றும் மேலும் அத்வானி வகுத்த எதிர்கால திட்டங்கள் மற்றும் மக்கள் ஆதரவு கொள்கைகளால் அவரது மந்திரி பதவி பாராட்டு பெற்றது’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
தனது தன்னலமற்ற மற்றும் விடாமுயற்சியான பணிகளால் பா.ஜனதாவுக்கு தொண்டாற்றியதாக எல்.கே.அத்வானியை பாராட்டிய மோடி, கட்சியின் நீண்டகால தலைவராக அவர் செயல்படுவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதைப்போல பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் எல்.கே.அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். பா.ஜனதாவை கட்டமைப்பதில் எல்.கே.அத்வானி மேற்கொண்ட அயராத பணிகளையும் அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
எல்.கே.அத்வானி இன்றைய பாக்கிஸ்தானின் சிந்தி மாநிலத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.