அஷ்ரப் பின்'ரணில் சாரதியாக இருக்கும் வரை ஐ.தே.கட்சி எனும் வாகனத்தில் ஏறவேண்டாம் என்ற ஒசியத்துக்கு மாற்றமாக ஒவ்வொரு தேர்தலிலும் ஏறுவதால் இடையில் இறங்க வேண்டிய இக்கட்டும் அமைச்சுப்பதவிகாலத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அபாக்கியமும் அடிக்கடி ஏற்படுகிறது அருமைத் தலைவருக்கு
2000ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான கயிற்றினை விழுங்கிக்கொண்டு ஆடுபுலி ஆட்டம் காட்டியதால் சந்திரிக்காவினால்அமைச்சுப் பதவி இடையில் பறிக்கப்பட்டது
2001ம்ஆண்டு சந்திரிக்கா ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் கப்பல்துறை துறைமுகம் முஸ்லிம் கலாச்சார விவகாரம் என புடவை தலப்பு போல நீண்ட அமைச்சினை வகித்த போதும் புலிகள் இயக்கத்துக்கு இடைக்கால நிருவாகசபையினை வழங்க ரணில் முற்பட்ட வேளையில் அரசாங்கம் கலைக்கப்பட்டது அப்போதும் அமைச்சின்கதை இடையில் கந்தலானது
2004ம்ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கம். ரணிலின் கரங்களை பலப்படுத்தி முஸ்லிம்களின் பலத்தை பலவீனப்படுத்தும் காரியத்தில் ஹக்கீம்ஈடுபட்டார் 2006 ம்ஆண்டு உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு டம்மி உறுப்பினர்களை உள்ளீர்க்கும் முகமாக ஆதரவு,2008யில் அரசாங்கத்தின் பட்ஜட்டைதோற்கடிக்க கையுயர்த்தி தபால் அமைச்சுப்பதவி இடையில் பறிபோனதுடன் இருபாராளுமன்றஉறுப்பினர்களின்( பாயிஸ்.நிஜாமுத்தீன்) இழப்பும்ஏற்பட்டது
2010ம்ஆண்டுUPFA அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் பாய்வதை தடுக்கவும் 18 வது அரசியல்திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றவும் மஹிந்தவிவின் மடியில் சங்கமமானார் பகரமாக இடைப்பட்ட சிறுகாலம் நீதி அமைச்சுபதவி வகிக்கமுடிந்தது
2015ம்ஆண்டு அரசாங்கம் இதிலும் முழுமையான காலத்தை கடத்தும் பாக்கியம் கிட்டவில்லை காரணம் அஷ்ரபின் ஒசியத்தை காலில் போட்டு மிதித்து அரசியல் செய்வது
அந்த மாதலைவனின் சாபம் சும்மா விடாது முழு சமூகத்தின் சாபமாக சுழன்றடிக்கிறது
அவ்வாறிருக்கையில் ரணிலை காப்பாற்ற ஆடுகின்ற ஆட்டம் கொஞ்சமில்லை.கர்ஜிப்பதும் காலைப்பிடிப்பதும் கடைசியில் அமைச்சுப்பதவியினை அனுபவிக்கமுடியாமல் போகும் அவலம்.
ரணிலுக்கு ரபான் அடிப்பதால் இனியும் உமது அரசியலில் தொடரும்
_ அலறி றிபாஸ்