மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குற்பட்ட நவக்கேணி மென் கெப்
விசேட தேவையுடைய பாடசாலை பிள்ளைகளினால் கழிவு பொருட்களினால் செய்யப்பட்டு
காட்சிப்படுத்தப்பட்ட கைப்பணி பொருட்களின்
கண்காட்சி பாடசாலையில் நடைபெற்றது
மென் கெப் விசேட தேவையுடைய பாடசாலையின் ஸ்தாபகர் கிறிஸ்டோபர் ஸ்டப்ஸ் ஆலோசனைக்கு அமைவாக பாடசாலை அதிபர் கௌரி ஜீவராஜ்
பிரசன்யா தலைமையில் “ கோ கிரீன் “ எனும் தலைப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் பாடசாலை
பிள்ளைகள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்பில் கழிவு பொருட்களை
கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த காண்காட்சி
நிகழ்வில் அதிதிகளாக மாநகர பதில் முதல்வரும் ,பிரதி முதல்வருமான கந்தசாமி
சத்தியசீலன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் டி
.ராஜ்குமார் , கமிட் நிறுவன திட்ட பணிப்பாளர் கே .காண்டீபன் மற்றும் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் ,
பாடசாலை பிள்ளைகள் ,பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்
.
