
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் வணிக மாவட்டமான மொன்ட்றியலில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தாதியர், சமூக பணிகள் போன்ற துறைகளில் தொழில் அனுபவ காலங்களில் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
பெரும்பாலும் பெண்கள் பணியாற்றும் இத்துறைகளில், தமது வேலைக்கு ஊதியம் வழங்கப்படாது அநீதி இழைக்கப்படுவதை கண்டிக்கும் வகையிலேயே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குறிப்பிட்டார்.
இவ்வாரம் முழுவதும் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 58 ஆயிரம் மாணவர்கள் பங்குபற்றியதாகவும், மாகாண ரீதியிலான மாணவர்களின் இவ் ஆர்ப்பாட்டமானது நாளை மறுதினம் வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
