இந்தியாவில் புதிய சகாப்தம் உருவாகி நான்காவது தொழில் புரட்சிக்கு நமது நாடு தலைமை தாங்கும் என்று நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் 1 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
தீபாவளி பரிசாக மத்திய மற்றும் சிறுதொழில்களின் வளர்ச்சிக்காக 12 புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம் உருவாகும் எனவும் அது நான்காவது தொழில் புரட்சிக்கு தமது நாட்டுக்கு தலைமை தாங்கும் தகுதியை தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட சுலபமாக தொழில் தொடங்க தகுதியான நாடுகள் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டு 23 இடங்கள் முன்னேறியுள்ளதை பெருமிதத்துடன் குறிப்பிட்ட மோடி, மத்தியரகம் மற்றும் சிறுதொழில் துறையின் வளர்ச்சியினால் இந்தியா இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளதாக தெரிவித்த மோடி
மத்தியரகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் சுலபமாக வங்கி கடன்களை பெறும் வகையில் நாடு தழுவிய அளவில் 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை சுலபமாக கடன்பெறும் இணைய வசதி இன்று முதல் தொடங்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
இதன் தொடர்சியாக
பொதுத்துறை வங்கிகளில் 59 நிமிடங்களில் கடன் கிடைக்கும் வகையிலான PSB loans in 59 minutes portal என்ற இணைய சேவையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.