ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த கையொப்பம் திரட்டும் நிகழ்வில் ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச மக்கள், சமூக அமைப்புக்களைச் சார்ந்தோர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொது தேர்தலை நடத்தும்படியும், மக்களின் உரிமையை உறுதி செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.