விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்விப்பிரிவிரின் கண்காட்சி நிகழ்வு நேற்று (13) திருகோணமலை அன்புவழிபுரம் தி /கலைமகள் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
விசேட தேவையுடைய மாணவர்களால் ஆசிரியர்களின் வழிகாட்டலில் அவர்களால் முயற்சியால் ஆன கைவேலை பொருட்கள் இக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்து.
இந்நிகழ்வில் மாகாணக் கல்வித் திணைக்கள இணைப்பாளர் எஸ்.ஜெனார்த்தனன் மற்றும் பாடசாலை அதிபர் திருமதி.எஸ்.யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.