LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 20, 2018

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மனித உடலை உண்ட பூனை

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும் 1600 மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை வெளியே தூக்கி வீசும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி 45 வயது மதிக்கதக்க பெண் ஆதரவற்ற நிலையில் உடல் நிலை பாதிப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அவரை டாக்டர்கள் வார்டு எண் 85 பெண்கள் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 9 மணியளவில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

அந்த பெண்ணின் உறவினர்கள் யாரும் வராததாலும் பெயர், ஊர் போன்ற தகவல்கள் தெரியாததால் அந்த பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் வார்டிலேயே வைத்தனர்.

அப்போது அங்கு சுற்றித்திரிந்த பூனை ஒன்று தரையில் வைக்கப்பட்டு இருந்த பெண்ணின் காலை கடித்து கொண்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கூறினர். அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை.

இதனையடுத்து அவர்கள் பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சியை தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் அங்கு இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் பெண்ணின் உடலை உடனடியாக பிணவறைக்கு கெண்டு செல்லுமாறு தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவ ஊழியர்கள் இறந்த பெண்ணின் உடலை அவசர அவசரமாக பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7