இதனை கனேடிய மத்திய அரசாங்கம் நேற்று உறுதி செய்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தூதரகம் உதவி வழங்கியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா வடக்கு அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் இருந்து ஏயார் ஜமைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ஜெட் ரக விமானம் 126 பயணிகளுடன் (கனேடியர் 82) ரொறன்ரோ நகரை நோக்கி இம்மாதம் 9 ஆம் திகதி சென்றது.
வானில் பறந்து கொண்டிருந்த சில நிமிடத்தில் இயந்திர கோளாறு உள்ளதை அறிந்த விமானி அந்த விமானம் உடனடியாக ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.
இதைத் தொடர்ந்து ,கடுமையான அதிர்வுடன் தாறுமாறாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியை உடைத்துக் கொண்டு நின்றது. இந்த விபத்தில் விமானத்தின் இறக்கை உள்ளிட்ட சில பகுதிகள் சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் உடனடியாக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது விபரங்களை வெளியிட மறுத்துள்ளது.