பாண்டிருப்பில் தொடரும் மழையுடன் கூடிய காலநிலையினால் அங்குள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசிக்கும் மேட்டுவட்டை வீட்டத்திட்டத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அம்மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
இங்கு 85 குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்தகால யுத்தம், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களே இங்கு வசிக்கின்றனர். வறுமைக்கோட்டிற்குட்பட்ட இம் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கூட பெற்றுக்கொடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. கடந்த 2011 இல் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டிருந்தன. அப்போது அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இம் மக்களுக்கு மட்டும் இன்று வரை அத் தொகை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாண்டிருப்பில் செல்லப்பர் தோட்டம், காளிகோவில் அண்டிய பகுதிகளிலுள்ள தாழ்நிலப்பகுதிகளும் வீடுகளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்