மேலும் கனடாவின் ஆளுநர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களுக்கான நிதி ஆதரவினைப் பெறுவதற்கு உரித்துடையவர்களாக காணப்படும் நிலைமையிலேயே இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் கனடிய ஆளுநர்கள் நாட்டின் நலனுக்காக பெருமளவு சேவையாற்றியவர்கள் என்பது உண்மை. ஆனாலும் அவர்களது செலவினங்கள் தொடர்பாக மக்கள் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கின்றனர். எனவே இது தொடர்பாக கவனம் செலுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று ஜஸ்ரின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.