மட்டக்களப்பு கல்லடி உப்போடை - சிவானந்தா ,விவேகானந்தா பாடசாலைகளின் மாணவ
ஒன்றியத்தினால் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களின் கற்றல்
நடவடிக்கையினை மேம்படுத்தும் வகையில் கல்வி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகின்றனர்
இதன்கீழ் மட்டக்களப்பு கல்லடி உப்போடை - சிவானந்தா
மற்றும் விவேகானந்தா பாடசாலைகளின் மாணவர்களுக்கு கணிதம் விஞ்ஞானம் ,வரலாறு
ஆகிய பாடத்திற்கு மூன்று நாட்கள் பயிற்சி
செயலமர்வுகள் நடாத்தப்பட்டு போட்டி பரீட்சைகளும்
நடாத்தப்பட்டது
மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட செயலமர்வில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட போட்டி பரீட்சையில்
சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலை அதிபர் திருமதி பிரபாகரி
ராஜகோபாலசிங்கம் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்ற பரிசில்கள்
வழங்கும் நிகழ்வில் பாடசாலை ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , சிவானந்தா , விவேகானந்தா மாணவ ஒன்றிய
மாணவர்கள் கலந்துகொண்டனர்