LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 30, 2018

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார நிகழ்வில் கலைஞர்.நல்லதம்பி சுப்பிரமணியம் கெளரவிப்பு.

(ரமேஸ்)
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த சினிமா, நாடகம் மற்றும் கலை, கலாசார, இலக்கியத்துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மூத்த கலைஞர்களையும், இளம் கலைஞர்களையும் கெளரவிக்கும் கலாசார நிகழ்வாக இன்றைய தினம் பேத்தாழை குகணேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது சினிமாத்துறையில் மட்டுமன்றி, நாடகத்துறையிலும் சிறந்து விளங்கிய  கறுவாக்கேணியை சேர்ந்த கலைஞர்.நல்லதம்பி சுப்பிரமணியம் பாராட்டு சான்றிதழ் மற்றும், நினைவுச்சின்னம் என்பவற்றுடன்,  பொன்னாடை அணிவித்தும் கெளரவிக்கப்பட்டார்.  'ஒரே நாளில்' எனும் நாடகம் 'வட்டிலக்கம் 303' என்ற திரைப்படம் ஆகியவற்றில் தனது நடிப்பாற்றல் மூலம் கலைத்துவத்தை வெளிப்படுத்தியமைக்காக இவர் கெளரவிக்கப்பட்டார். மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடைபெற்ற கலைஞர்கள் கெளரவிப்பு நிகழ்விலும் இவர் சிறந்த கலைஞருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தார்.







 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7