LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 21, 2018

இயற்கை விவசாய உணவுப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவத்துறையும் விழுது நிறுவனமும் இணைந்து நடாத்தும் இயற்கை விவசாய உணவுப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு எதிர்வரும் 23ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் திருகோணமலை செல்வநாயகபுரம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இடம் பெறவுள்ளது.

உணவே மருந்து மருந்தே உணவு எனும் தொனிப் பொருளில் இடம் பெறவுள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்வின் மூலமாக தற்போதய நாகரீக உணவுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள எமது மக்களிடையே அவற்றால் ஏற்படும் தீமைகளை விளக்குவதுடன் அருகிவரும் எமது பாரம்பரிய உணவுகளை மீண்டும் பயன்படுத்த விழிப்புணர்வு வழங்கப்படும். அத்துடன் எமது பாரம்பரிய உணவில் உள்ள சத்துக்களையும் நோய் எதிர்ப்புச் சத்துக்களையும் விஞ்ஞான பூர்வமான விளக்கங்களும் வழங்கப்படும்.

மேலும் எமக்கு ஏற்படும் சிறிய நோய்களுக்கான மறுந்தாக நமது வீடுகளில் தயாரிக்கும் பாரம்பரிய உணவுகளே காணப்படுகிறது. போன்ற விடயங்கள் விஞ்ஞான பூர்வமாக தெளிவுகளையும் பேற்றுக் கொள்ளலாம். என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7