தாய்லாந்தின் பாங்காக் நகரத்தில் லாட் க்ராபங்க் மாவட்டத்தில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு நூடுல்ஸ் பரிமாறப்பட்டது. அதில் மாமிசம் ஒன்று இருப்பதை பார்த்த ஒரு வாடிக்கையாளர், உணவக ஆய்வு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மாட்டுக்கறியாக இருக்கலாம் என நினைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சமையலறை முழுவதும், ரத்தக்கறையும், சில வித்யாசமான மனித பாகங்களும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.பின்னர் நடத்திய தேடுதல் வேட்டையில், உணவகத்தில் மேல்தளத்தில் இருந்த கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியில் 60 வயது முதியவரின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தினமும் கடைக்கு வரக்கூடிய பிரசீத் இன்பாதம் என்பது அடையாளம் கண்டறியப்பட்டது. அவர் கடந்த 21ம் தேதியன்று உணவகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்திருந்தார் என அவருடைய சகோதரர் தெரிவித்தார்.
அப்போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம். அதில் தான் உணவக உரிமையாளர் சுத்தியலை கொண்டு தலையில் அடித்து கொலை செய்திருக்கலாம் என பிரேத பரிசோதனையின்படி போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதோடு, தலைமறையாகிய உணவக உரிமையாளரையும் தேடி வருகின்றனர்.