என மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அரூஸ் தெரிவித்தார்.
இன்று (19)சபையின் உறுப்பினர்கள்,ஊழியர்களுக்காக நடைபெற்ற 'பொறுப்புக் கூறல்' தொடர்பான செயலமர்வில் அவர் கலந்து கொண்டு தலமையுரையை ஆற்றினார்;
இங்கு மேலும் பேசிய தவிசாளர்,
எமது உறுப்பினர்கள் மக்களுக்கு சேவையாற்ற துடிப்புடன் உள்ளனர்.அவர்களுக்கு தேவையான அனுபவங்கள் வழங்கள் தேவையாகவுள்ளன. அதனடிப்படையில் இன்றைய செலமர்வு மிகவும் முக்கியமானது அதனை எமது உறுப்பினர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கு மாறு நான் அகம் நிறுவனத்தை கோரியிருந்தேன் அதற்கிணங்க இன்று இச்செலமர்வு நடைபெறுகின்றது.
இதுமாத்திரமின்றி மாவட்டத்தில் ஓரு முன்மாதிரியான சபையாக இச்சபை தொழிற்பட வேண்டும் அதற்குதேவையான கள அனுபவங்களையும் எமக்கு இவ்வமைப்பு பெற்றுதர வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தார்.
இங்கு பேசிய வளவாளர் ஆ.சொர்ணலிங்கம், நாம் தற்போது எதை மனதில் கனவாக காண்கின்றோமோ? அதுவே எதிர்காலத்தில் செயற்பாடாக மலரும் .கடந்த காலத்தில் எமது நாட்டின் தலைவர்கள் கண்ட கனவே எமது நாட்டில் இன்று பிரதிபலிக்கின்றது.
எனவே பல்லினம் வாழுக்கின்ற இந்த நாட்டு மக்களின் தலைவர்களின் மனக்கனவு சகல மக்களுக்கும் பொறுப்புச்சொல்லும் வகையில் அமைய வேண்டும் அவ்வாறு இல்லாத விடத்து நாம் அபிவிருத்தி காணமுடியாது
முதூர் பிரதேச சபை பல்லின மக்களின் பிரதிநிதிகளைக்கொண்ட சபை. இச்சபையின் பிரதிநிதிகள் கூடி தமது நல்லிணக்க ஆட்சிக்கான அடிப்படைக்கொள்கைகளை, வகுத்துச்செயற்படமுடியும் . அவ்வாறு செயற்பட்டால் கிழக்கில் ஓரு முன்மாதிரியான நல்லாட்சி கொண்ட சபையாக மிழிர முடியும்.
அதற்கு நமது உறுப்பினர்களின் கனவு எதிர்காலத்தில் நல்லாட்சி கொண்டதாக அமைய அடிப்படையாக அமையவேண்டும் குறிப்பாக அதற்கான கொள்கைகள், பொறுப்புக்கூறல்கள் இருக்கவேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படவேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலைமைகள் மக்களுக்கான பொறுப்புகூறலை தெளிவாக புரிய வைக்கின்றன. எனவே இவை சிறந்த உதாரணங்கள் எனவும் குறிப்பிட்டார்.
அகம் அமைப்பின் பிரதி இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் குறிப்பிடுகையில்,
எமது பிரதேசங்கள் பல பாதிப்புக்களைக்கண்ட பிரதேசங்கள், இப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன. அதற்காக மக்கள் அங்கலாய்கின்றனர்.
இவ்வாறான மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்ககப்படவேண்டும்.இதற்கு அடிமட்ட மக்கள் பிரதிநிதிகள்,அதிகாரிகள் தமக்கான பொறுப்புக்கூறலை புரிந்து செயலாற்றவேண்டியுள்ளது. வேறுபாடுகளின்றி சகல மக்களின் உரிமைகளை சமமமாக மதித்து சேவையாற்ற வேண்டும்
இதனைக்கருத்தில் கொண்டு இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டன.கடந்த வாரம்மூதூர் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு இச்செயலமர்வு நடாத்தப்பட்டன.இன்று இங்கு நடாத்தப்படுகின்றன.எனவும் சுட்டிக்காட்டினார்.
இச்செயலமர்வு அகம் அமைப்பின் பிரதி இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றன. பிரதி தவிசாளர் எஸ்.துரைநாயகம்,செயலாளர் ஹில்மி முகமட்,சபையின் அனைத்துக்கட்சிகளின் உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் என 53பேர் கலந்துகொண்டனர் பிரதி தவிசாளர் துரைநாயகம் நன்யுரையை வழங்கியதுடன் காலத்திற்கு தேவையான செயலமர்வு இது இந்நிகழ்வு பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.
(அச்சுதன்)