LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 21, 2018

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக உபவேந்தரின் நியமனத்தை ரத்து செய்ய கோரி ஆர்பாட்டம்


 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக உபவேந்தரின் நியமனத்தை ரத்து செய்யுமாறு கோரி இன்று மட்டக்களப்பில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது


மட்டக்களப்பு கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பேராசிரியர் ஜெசங்கரின் நியமனத்தை ரத்து செய்து தகுதியான ஒருவருக்கு உபவேந்தர் நியானம் வழங்க கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது

கடந்தா மூன்று வருடகாலம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் பேராசிரியராக பதவி வகித்துவரும் பேராசிரியர் ஜெசங்கர் பல்கலைக்கழகத்தின்  கல்வி நடவடிக்கைகளை தமது சொந்த தேவைகளுக்கு ஏற்ப நடாத்தி வருவதாகவும் தனது பதவி உயர்வுக்கு தேவையான நடவடிக்கைகளை முந்தன்மைப்படுத்தி மாணவர்களின் கல்வியை சீரழிப்பதாகவும் , பேராசிரியரின் மனைவி தனக்கு வேண்டிய வெள்ளைக்காரப் பெண்களை கலைஞர்கள் என்ற போர்வையில் அழைப்பதற்கு நிறுவனத்தின் நிதியினைப் பயன் படுத்தி துஸ்பிரயோகம் செய்வதாகவும் கட்டிட ஒப்பந்தம் ,பொருட்கள் கொள்வனவு என்பவற்றில் நிதி மோசடி இடம்பெறுவதாகவும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர் தெரிவித்தனர் .

இதேவேளை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பதவிக்காக நடாத்தப்பட்ட  நேர்முக பரீட்சை போது முகாமைத்துவ சபை உறுப்பினர்களை எச்சரித்து கூடிய புள்ளிகளை வழங்குமாறு கட்டளையிடப்பட்டு முன்னிலைப்படுத்த பட்டுள்ளதாக ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் 
இது தொடர்பான துண்டு பிரசுரங்களும் ஆர்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன ,

மட்டக்களப்பு கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட ஆர்பாட்ட இடத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் எஸ். வியாலேந்திரன் , ஆர்பாட்டம் தொடர்பாக கேட்டு அறிந்துகொண்டதுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் கையளிக்கப்பட்ட மகஜரினையும் பெற்றுக்கொண்டார்

மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெறுகின்ற  விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதற்கான துரித நடவடிக்கையின் எடுப்பதாக தெரிவித்தார்






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7