LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 6, 2018

தமிழரின் வீரத்திருநாள் தீபாவளி...

அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் மண்ணில் நம்பச்செய்யப்பட்டு உள்ளது. வட இந்தியாவில், காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள்தான் தீபாவளி என்று கூறப்படுகிறது. இது தமிழர் வரலாற்றுக்கு எதிரானது. தொடர்ந்து படியுங்கள்.....
மாமன்னர் ராஜராஜ சோழனின் புதல்வர் ரஜேந்திர சோழன். மிக அதிக நிலபரப்ைப ஆண்ட தமிழ் மன்னர் மட்டுமல்ல; இந்திய மன்னரும் இவரே. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இன்றைய மலேசியா ( கடாரம் ) சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இவருடைய ஆட்சியில் இருந்தன. தஞ்சாவூரில் இருந்து பெரும்படையை திரட்டிக் கொண்டு இவர் ஆந்திரா, ஒரிசா, வங்கம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே படை நடத்திச் சென்று இமயமலையை அடைந்தார்.
ராஜேந்திர சோழன் இமயம் வென்று திரும்புகையில், கங்கையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார். பிறகுதான் கங்கையை வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரத்தை உருவாக்கினார். சோழகங்கம் என்ற ஏரியை அமைத்தார். இவை இன்றும் உள்ளன. சோழகங்கம் ஏரியில் குளித்ததை நினைவுகூரும் வகையில்தான், இன்றும் கூட தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று சாதாரணமாகவே வீடுகளில் கேட்கப்படுகிறது.
பெரும் வெற்றியுடன் தஞ்சாவூருக்கு 1023 ஆம் ஆண்டு திரும்பிய ராஜந்திர சோழனுக்கு கொள்ளிடம் ஆற்றுக் கரையில் மிகப் பெரிய வரவேற்பு தரப்பட்டது. குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், கலைஞர்கள் என பல லட்சம் பேர் திரண்டு ராஜந்திர சோழனுக்கு வரவேற்பு தந்தனர். ராஜேந்திரன் வெற்றியுடன் திரும்பியதற்கான கல்வெட்டு கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில்
திருலோக்கி கிராமத்தில் இப்போதும் உள்ளது. கொள்ளிடம் ஆற்றுக் கரையில் ஐப்பசி மாத அமாவாசை நாளன்று காலை இந்த வரவேற்பு தரப்பட்டது. வரவேற்புக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் வீடுகளில் நீராடி, புத்தாடை அணிந்து, தீப ஒளிகளை ஏற்றி, இனிப்புச் செய்து, மாமிசம் சமைத்து கொண்டாடினார்கள். அன்று முதல் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் அமாவாசை நாள் அதிகாலையில் ராஜேந்திரனின் வெற்றித் திருநாள் வீடுகளில் தீப ஒளி ஏற்றிக் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட விஜயநகர மன்னர்கள் , திருமலை நாயக்கர் ஆகியோர் தமி்ழ்நாட்டை (கி.பி 1500 வாக்கில்) ஆண்டபோது பல்வேறு தமிழ் மரபுகள் மாற்றி அமைக்கப்பட்டன. கோயில் உள்ள ஊர்கள் முன்பு திரு சேர்க்கப்பட்டது. தஞ்சை பெரு உடையார் கோயில் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று ஆனது. திருவரங்கம் ஸ்ரீரங்கம் என மாற்றப்பட்டது. தில்லை நகரம் சிதம்பரம் என்றும் திருமுதுகுன்றம் என்பது விருதாசலம் என்று பெயர் மாற்றப்பட்டதும் விஜயநகர மன்னர்களின் ஆட்சியில்தான். மேலும் விஜய நகர மன்னர்களை அவரது ஆளுகைக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் சந்தித்து ஆண்டுக்கு ஒரு முறை கப்பம் செலுத்த வேண்டும் . அன்றைய தினம் விஜயதசமி என்ற திருவிழாவாக உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு போட்டியாக இன்னொரு வெற்றித்திரு நாள் இருக்கக்கூடாது என்று கருதினார்கள். இதனால் அதுவரை ராேஜந்திரசோழனின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்பட்டு வந்த தீப ஒளி விழா, நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாள் என்ற புதுக்கதை உருவாக்கப்பட்டது. ரஜேந்திர சோழன் வெற்றிப் பயணம் மறைக்கப்பட்டது.
எனவே, தீபாவளி என்பது வடஇந்தியரை தமிழ் மன்னன் கொண்ட வெற்றியின் அடையாளமே தவிர நரகாசூரன் வதை செய்யப்பட்ட நாள் அல்ல, காடு சென்ற ராமன் நாடு திரும்பிய நாளும் அல்ல


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7