LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 20, 2018

இருபெரும் கட்சிகளும் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய மிகக்கட்டாயமான தருணம்


இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாதல் எனும் தனது கனவை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக இரு பெரும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மிகக்கொடூரமான முறையில் மைத்திரிபால சிறிசேன ஏமாற்றியுள்ளார். அவர்களுக்கு துரோகமிழைத்துள்ளார். தான் முதலாவது தடவை ஜனாதிபதியாவதற்காக மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றாக அப்பம் சாப்பிட்டுவிட்டு அவருடைய கட்சியிலிருந்து வெளியேறி ஐ.தே.கூட்டணியுடன் இணைந்து ஜனாதிபதியாகியதன் மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்தார். அது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முன்னெடுப்பு என பெரும்பாலான மக்களால் கௌரவமாக நோக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் அதே மகிந்த ராஜபக்சவைப் பயன்படுத்தி அவரைப் பிரதமாராக்குவதாகக் கூறி இரண்டாவது தடவையும் தான் ஜனாபதியாக ஆகுவதற்கான வியூகத்தை வகுத்து மீண்டும் ஒரு தடவை மகிந்த ராஜபக்சவை ஏமாற்றியுள்ளார் மைத்திரி.

பதவி மோகத்தில் சதா அலைந்துகொண்டிருக்கும் மகிந்தவுக்கும் மைத்திரியின் ஏமாற்றுத்தனம் புரியவில்லை என்பதுதான் உண்மை!

இவ்விடயம் ஒரு புறமிருக்க தன்னை முதற்தடவை ஜனாதிபதியாக்கிய கட்சிக்கும் அதன் தலைவருக்கும் துரோகதிழைத்துள்ளார். இது மாத்திரமன்றி தான் செய்த தவற்றை மறைப்பதற்காக மேலும் பல தவறுகளைச் செய்துகொண்டேயிருக்கும் மைத்திரி தேசத்தின் மீதான நல்லெண்ணத்தை தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் களங்கப்படுத்திக்கொண்டுமிருக்கிறார். இதன் விளைவாக சர்வதேச ரீதியில் நாம் அனுபவித்து வருகின்ற பொருளாதார மற்றும் கடனுதவிகள் இடைநிறுத்தப்படுவதற்கான சமிக்ஞைகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இரு பெரும் கட்சிகளுக்கும் இத்தகைய துரோகத்தினை இழைத்ததோடு நாட்டின் கௌரவம் பாதிப்படையக் காரணமாக இருந்த மைத்திரியை தேச நலன் கருதியும் எதிர்காலப் பொருளாதாரச் சுமையிலிருந்து நாட்டை மீட்பதற்காகவும் இரு கட்சிகளும் ஒன்றுபட்டு இவர் மீதான குற்றப்பிரேரணையைப் பாராளுமன்றத்தில் வென்றெடுத்து இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

பின்னர் ஒரு தேர்தலின் மூலம் மக்கள் ஆணையைப் பெற்று எந்தக் கட்சியோ அல்லது கூட்டணியோ ஒரு ஸ்திரமான ஆட்சியை நாட்டில் நிறுவவேண்டும். இன்றுள்ள குழப்ப நிலையை சரி செய்ய இதுவே பொருத்தமான தீர்வாகும். நாட்டின் இருபெரும் கட்சிகளின் மீதுள்ள தார்மீகக் கடமையும் இதுவேயாகும். இதன்
மூலம் சிதைந்த  ஜனநாயகச் செயற்பாடுகளைச் சரி செய்துள்ளோம் இன்பதை சர்வதேசத்திற்கும் பறைசாற்ற இயலுமாயிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!

ரா.ப.அரூஸ்





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7