2021ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் மேலதிகமாக 40 ஆயிரம் குடியேற்றவாசிகளை அனுமதிக்க எதிர்பார்த்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது. குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசென் நேற்று இவ்வறிவிப்பை விடு த்துள்ளார்.
அதற்கமைய கனடாவின் மொத்த குடியேற்றவாசிகள் வருகையானது 3 இலட்சத்து 50 ஆயிரமாக உயர்வடையும் என்றும், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையின் ஒரு வீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று ஆண்டுகளை உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட குடியேற்றவாசிகள் அளவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புள்ளிவிபரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கு அமைவாக இவ்வாண்டு 3 இலட்சத்து 10 ஆயிரமாகவுள்ள அனுமதிக்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையானது ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர் சந்தையில் காணப்படும் வெற்றிடங்கள் மற்றும் திறன் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பொருளாதார திட்டத்தின் கீழ் இந்த குடியேற்றவாசிகளின் அனுமதி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.