கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தனியரசு கரூர் புலியூரில் நிருபர்களிடம் பேசும் போது
ஜெயலலிதாவை போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று தெரிவித்தார்.
அத்தோடு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தது போல, அவர்கள் இருவரினுடனும் டி.டி.வி. தினகரன் இணைய வேண்டும் என்றும் அதுவே வரும் இடைதேர்தலில் எதிர்கட்சிகளை வீழுத்த எதுவாகும் என்றும் தெரிவித்தார்.
அப்படி நடக்கவில்லையென்றால், நடைபெற உள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெல்வதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் மேலும் கூறினார்.
எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும் வேளையில் அ.தி.மு.க. பிளவுபட்டு இருந்தால் அது தி.மு.க.வுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக முடிந்து விடும். அவர்கள் மூன்று பேரையும் இணைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதற்கு முயற்சி செய்வேன் என்று தெரிவித்த அவர் சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து எதிர்மறையாக சித்தரித்து உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இருந்தால் அதை நீக்க கொங்கு இளைஞர் பேரவை போராடும். தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் அரசின் குறைபாடுகள் செயல்பாடுகளை சுட்டி காட்டுவோம் என்றும் அவர் கூறினார்