கொடகே அமைப்பு தேசிய சாகித்ய விருதை இலங்கையில் மூன்று மொழி இலக்கியத்தை மேம் படுத்தவும்,எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவும்,இலக்கிய செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும், 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு நிறுவனம்,தலைநகர் கொழும்பை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் இந்த நிறுவனம் சர்வதேச இலக்கியங்களை மொழி பெயர்ப்பதுடன்,சிறந்த படைப்புக்களை தேர்வு செய்து படைப்பாளர்களை விருதளித்து அங்கீகரிப்பது,சிறந்த ஆளுமைகளின் புத்தகங்களை தெரிவுக்குற்படுத்தி வெளியீடுவதும்,படைப்பாளிகளை ஆவணப்படுத்துவதும்.வாழ் நாள் சாதனையாளர் கௌரவிப்பு போன்ற பணிகளையும் செய்கிறது.
கொடகே தேசிய சாகித்ய விருது இலங்கையில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும்.ஒவ்வோராண்டும் இலங்கை அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளில் சிறந்த படைப்பை ஒவ்வொரு மொழிக்கும் தனித் தனியாக ஒன்றை தேர்வு செய்து இந்த சாகித்திய விருது வழங்கப்படும்.
2013ம் ஆண்டு முதன முதலில் தமிழ் மொழி இலக்கியங்களுக்கு விருது வழங்க முன் வந்தது கடந்த 15 வருடகாலமாக சிங்களம் மற்றும் சிங்கள இலக்கியங்களை ஆங்கிலத்தில் படைத்தவர்களுக்காகவும் விருதுகளை வழங்கி வந்தமைப்பு கடந்த ஐந்து வருடமாகவே நேரடி தமிழ் நூல்களுக்கும் தமிழில் வந்த நூல்களை சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்தவர்களுக்குமான விருதை வழங்கி வருகிறது.
கொடகே அமைப்பு இலங்கை எழுத்தாளர்களுக்கு மட்டும் என்று மட்டுப்படுத்தாமல் தமிழில் வெளி வந்த சிறந்த வெளி நாட்டு நூல்களையும் சிங்களத்தில் மொழி பெயர்க்க முன் வந்து தமிழ் நாட்டைச் சேர்ந்த கு.சின்னப்பா பாரதி,பிரபஞ்சன்,ஜெயகாந்தன் போன்றோர்களின் நூல்களையும் சிங்களத்தில் மொழி பெயர்த்தது.
இம் கொடகே தேசிய சாகித்ய இலக்கிய விருதுக்காக ஆரம்ப காலத்தில் கவிதைக்காக 25,000ரூபாவும் சிறுகதைக்காக 25,000 ரூபாவும் நாவல் ஒன்றுக்காக தலா 100,000 ரூபா பணப்பரிசுடன் கேடயம் சான்றிதழும் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு முதல் கவிதை நூலொன்றுக்காக 50,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்காண சாகித்ய விருது 2017ல் வெளி வந்த ஜே.பிரோஸ்கானின் 'நாக்கு'என்ற நவீன கவிதை நூலுக்காக வழங்கப்பட்டது.இவ் விருது 50,000 ரூபா பணப்பரிசுடன் பராட்டுப்பத்திரம் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த நூலை பேனா பதிப்பகம் பதிப்பு செய்திருந்தது.
இந்த கொடகே தேசிய சாகித்ய விருதை தலை நகரில் உள்ள எழுத்தாளர்களே அதிகம் பெற்றிருந்தார்கள்.பின்னர் பரவலாக வெளி மாவட்டங்களான மட்டக்களப்பு,அம்பாறை,யாழ்ப்பா ணம்,திருகோணமலை எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை மூன்று சாகித்ய விருது கிடைத்திருக்கிறது அதில் இரண்டு கிண்ணியாவுக்கும் ஒன்று மூதுருக்குமாக கிடைத்தது.இந்த தேசிய விருதை முதலில் கிண்ணியாவில் மரபு கவிதைக்காக கவிமணி அ.கௌரிதாசன் தனது ஒரு கவிதை எழுதி விட என்ற நூலுக்காக பெற்றியிருந்தார் இந்த நூலும் கவிஞர் பிரோஸ்கானின் பேனா பதிப்பக வெளியீடாகவே வெளி வந்திருந்தது.
இந்தாண்டு கொடகே தேசிய சாகித்ய விருதை பெற்ற ஜே.பிரோஸ்கானின் தந்தைமுகம்மது அனீபா ஜமால்தீன் ஒரு சாதாரண மீன் பிடியாளர்.தமது வறுமை நிலையிலும் அவர் தனது பிள்ளையின் திறமைகளை தடுக்காமல் அவர்களது திறமையின் பாதையில் பயணிக்க கைகொடுத்தவர்.
எழுத்தாளர் ஜே.பிரோஸ்கான் உயர் தரம் வரை கல்வி கற்றவர்.தற்போது வாகன சாரதியாகவே பணியாற்றி வருகின்றார்.இவ்வாறான நிலையிலும் தனது இலக்கிய பயணத்தை சிரமம் பல தாண்டி கடந்த 20வருடங்களாக கவிதை,சிறுகதை,நாவல்,கட்டுரை,கு றுந் திரைப்படம்,இலக்கிய சஞ்சிகை,இலக்கிய அமைப்பு,செய்திப் பத்திரிகையென பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கி வைத்துள்ளார் நதாவும் ஓவியமும் என்ற குறுந் திரைப்படத்தினூடாக.வரும் ஆண்டில் வெளியிடப்படும் வகையில் தாகம் என்ற குறுந் திரைப்படத்தையும் இயக்கும் முயற்சியில் தொடர்ந்தும் செயற்பாட்டோடு உள்ளார் ஜே.பிரோஸ்கான்.
1 இதுவும் பிந்திய இரவின் கனவுதான்
2 தீ குளிக்கும் ஆண் மரம்
3 என் எல்லா நரம்புகளிலும்
4 ஒரு சென்ரீ மீட்டர் சிரிப்பு பத்து செகண்ட் கோபம்
5 காக்கைச் சிறகினிலே நந்தலாலா(சிறார் இலக்கியம்,தேசிய நூலாக்கல் திணைக்களத்தினால் பரிசு பெற்று பதிப்பு செய்யப்பட்டவை)
6 ஆண் வேசி
7 மீன்கள் செத்த நதி
8 என் முதுகுப் புறம் ஒரு மரங் கொத்தி
9 நாக்கு
10 ஜே.பிரோஸ்கான் கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பு (வர இருப்பவை)
இது தவிர
11 மாய இரவும் மந்திரப் புன்னகையும்
12 உன் முத்தத்திற்குப் பட்டப் பெயர் கசையடி
13 ஹாதியா
14 சுடுதல் தீர்ந்து போகாத நெருப்பு(குறுங் நாவல்) போன்றவை நூலாக வர இருக்கிறது குறிப்பிடத் தக்கது.
இதைத்தவிர தனது இலக்கிய பயணத்தில் சோர்வு இன்றி கடந்த பத்தாண்டுகளாக பேனா பதிப்பகத்தை தொடங்கி அதன் பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார் இதுவரை 45 மேற்பட்ட நூல்களை பதிப்பு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பேனா இலக்கிய பேரவை என்ற ஒரு அரச பதிவு செய்யப்பட்ட அமைப்பையும் தொடங்கி அதனூடாக பல்வேறுபட்ட இலக்கிய நிகழ்வுகளயும் போட்டிகளையும் பயிற்ப்படடறைகளையும் ஒழுங்கு படுத்தி வருகின்றதேசிய கொடகே சாகித்ய விருதை பெற்ற இவரை எமது தட்டுங்கள் தளம் வாழ்த்தி பெருமையடைகிறது.