வாழைச்சேனை வை.எம்.எம்.ஏ முன்பள்ளி மாணவர்களுக்கான குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஈகார்ட்ஸ் நிறுவனத்தினால் குடிநீர் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு சம்பிரதாயபூர்வமாக பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
நிறுவனத்தின் நிறைவேற்று தவிசாளர் ஜுனைட் நளீமி, நிர்வாகப் பணிப்பாளர் பாரூக் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.