அன்பு துளிர்க்கும் தருணம்
முகிழ்ந்திருக்கும் மலரினை
பறித்து பிய்த்தெறிவதுபோல்
அத்தனை எளிதாக நிராகரித்துவிட்டு
வெளியேறிச் செல்கிறாய்
அனால் நிராகரிக்கப்பட்டவனின்
தீரா வலியினையோ
ஆறாத் துயரினையோ
உன்னால் உணர்ந்துகொள்ள
அவகாசமிருக்காது
அதற்கான சாத்தியங்களோ
அன்றி அறிகுறிகளோ
எதுவும் உன்னிடத்திலிருப்பதாக
தென்படவும் இல்லை
ஆனால் நீ ஒரு போதும்
நிச்சயமாக அறிந்திருக்கமாட்டாய்
நிராகரிக்கப்பட்ட இடத்திலிருந்துதான்
வலிமை மீகுந்த அன்பு
தழைக்கத் துவங்கும் நிஜத்தினை
0
ஜமீல்
சிறகுளற்ற வானம்
எலைகளற்று விரிந்து
கிடக்கிறது வானம்
அது ஆதியிலிருந்து
பறவைகளின் விடுதலையினை
ஓயாது பாடுகிறது
அதன் இருப்பின்
நிரந்தரத்தை உறுதிப்படுத்துகிறது
இவ்வாறான வானத்தை
அப்படியே நிராகிரித்துவிட்டு
தங்களிடம் இறக்கைகள் இருப்பதாக
மார்தட்டிக் அலகுயர்த்திக்
கூச்சலிடுவதில்
எந்த அர்த்தமுமில்லை
0
ஜமீல்