மட்டக்களப்பு மாவட்ட 14
பிரதேச செயலக பிரிவுகளில்
உள்ள முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்களாக
கடமையாற்றுகின்ற 80 ஆசிரியர்களுக்கான முன்பள்ளி சிறார்களின்
போசாக்கு நிலையை மேம்படுத்தும் செயலமர்வு மாவட்ட செயலகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி முரளிதரன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக காணி அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சனி முகுந்தன் தலைமையில் மாவட்ட
செயலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்
வரன் மற்றும் வளவாளர்களாக சுகாதார
அமைச்சின் உதவி பணிப்பாளர் திருமதி சுபோஜனி ஜனகன் ,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை அலுவலக அதிகாரி வைத்தியர்
அச்சுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்
முன்பள்ளி சிறுவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் நிகழ்ச்சித்
திட்டத்தின் போசாக்கு தொடர்பாக நடைபெறுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்குரிய
செயலமர்வில் முன்பள்ளி சிறுவர்களின் போசாக்கு மட்டத்தினை மேம்படுத்துவதற்கான
பெற்றோர்களின் பங்களிப்பு ,முன்பள்ளி சிறுவர்களின் போசாக்கு மட்டம் ,
நற்பழக்கங்கள் மற்றும் பாதுகாப்பினை கட்டி எழுப்புவதற்கான உபாயத் திட்டங்கள் போன்ற பயிற்சிகளுடான கையேடுக வழங்கப்பட்டு செயலமர்வுகள் மூன்று
நாட்கள் நடாத்தப்படவுள்ளன
மூன்று நாட்கள் நடைபெறுகின்ற
இந்த செயலமர்வில் பங்குகொள்ளும் ஆசிரியர்களுக்கான பங்குபற்றுதளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன