கனடாவில் மர்மப்பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து உடனடியாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடாவின் Edmonton இற்கும் Carlton தெருக்களுக்கும் இடையில் Broadway இல் அமைந்துள்ள அலுவலக கட்டிடம் ஒன்றில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பதாக உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் அந்த கட்டிடத்திற்கு விரைந்தனர்.
உடனடியாக கட்டிடத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர், Broadway இன் ஒரு பகுதி உட்பட சுற்றியுள்ள சில வீதிகள் மூடப்பட்டன. இரவு சுமார் 9 மணியளவில் அந்த பொதியினால் ஆபத்து எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த மர்மப்பொதி தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.