என்னை உங்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்
நானும் நீங்களும்
கடலலைகள் போல
அமைதியை நாடுகிறவர்கள்
சன்னல் திறந்து கிடக்கும்
ஒரு இரண்டாம் ஜாமத்தில்
பெரிய வெற்றிடமாக
அமைதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன்
நீங்களும் அப்படிதான்
அமைதியை வேண்டி நிற்கின்றீர்கள்
அமைதி என்னை விட்டு வெளியேறி
உங்களுக்குத் தெரிந்த
இடத்தில் வசிக்கிறது
உங்களது அமைதி
எனது தெருவைக் கடந்து செல்கிறது
வாழ்க்கையை
இப்படிதான் இயக்கப் பழகிக் கொண்டாேம்
ஆதியிலிருந்து அமைதியை
பகிர்ந்து கொள்ளத் தெரியாதவர்களாய் நாம்
ஏ.நஸ்புள்ளாஹ்