20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
20 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க. அதி தீவிரம் காட்டி வருகிறது. ஆட்சியை தக்கவைத்து கொள்ள குறைந்தது 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்பது தற்போது ஆளும் அ.தி.மு.க வின் குறைந்த பட்சத்தேவையுமாகும்.
கருணாநிதி மறைவால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியிடமாக அறிவிக்கப்பட்டது.
இதனை விட ஆளும் அரசால் மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதனால் காலியாக இருக்கும் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஜனவரியில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. இந்த இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி, தோல்வி ஆட்சியில் பிரதிபலிக்கும் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.