மட்டக்களப்பில்
புராதனமும் தொன்மையும் மிகுந்த ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு எல்லை வீதியில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ மகாநரசிங்க வையிரவ சுவாமி ஆலயம் ஆகும்
1800ம் ஆண்டிற்கு முற்பட்ட வரலாற்றை கொண்டிருக்கும் இவ்வாலயம் சடங்க முறைகளுக்கென
தனிச்சிறப்பை கொண்டிருக்கின்றது
இங்கு மூலமூர்த்தியாக ஸ்ரீ நரசிங்கவையிரவர் உருத்திரரூபமாக அருள்பாளிக்கின்றார்
அத்துடன் பிறபரிவார தெய்வங்களுக்கும் பூசைகளும் நடைபெறுகின்றன.
ஆணி உத்தர நன்னாளில் தொடங்கும் இவ்வாலயத்தின் சடங்கு உட்சவமானது 8 நாட்களுக்கு
ஆலய நிர்வாகத்தினால் சிறப்பாக நடத்தப்படுகின்றது
இச்சடங்குகளின் இறுதி நாளிள் நடத்தப்படுகின்ற சிறப்புபூசை சிறப்பம்சமாக
திகழ்கின்றது தற்போது இவ்வாலயத்தின் சுற்று மண்டபம் கட்டும் பணிகள்
முன்னெடுக்கப்படுகின்றன
அத்துடன் ஆலய அபிவிருத்தி நடவடிக்கைககள் ; நிர்வாக இளைஞர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது
சிவபெருமானும் விஸ்னு பகவானும் இனைந்து அருள்பாளிக்கும் பேராலயமான இவ்வாலயத்தை தரிசிப்பது
நல்வாழ்வளிக்கும்.