LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 21, 2018

தலைவர் பிரபாகரனின் இதயம் கிழக்கு எனவே விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய எந்த தரப்பிற்கும் நாங்கள் அடிப்போம்.


                                                                           (தீபன்)
  - தமிழ் தேசிய மக்கள் முன்னணி  மட்டு. இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

அரசாங்கம் தலைவர் பிரபாகரனிடம் வடக்கை மட்டும் வைத்துகொள். கிழக்கை விடு என அதற்கு தலைவர் எனக்கு வடக்கைவிட கிழக்கு என்னுடைய இதயம் என தெரிவித்தார்கிழக்கு விடுபடக் கூடாது என்பதற்காக  முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்பட்டது. எனவே இவ்வளவு தியாகத்தின் மத்தியில் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய எந்த தரப்பிற்கும் நாங்கள் அடிப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு. இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அன்னை பூபதி தமிழ் கலைக்கூடம் வைத்வெத் வளாகம், ஒஸ்லோ நோர்வே அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட மண்முனை மேற்கு பண்டாரியவெளி பிரதேசத்தில் 250 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை  வழங்கி வைக்கும்  நிகழ்வு பண்டாரியவெளி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நற்பணி மன்ற செயலாளார் எஸ். யோகேந்திரன் தலைமையில் செவ்வாய்கிழ(20) மாலை இடம்பெற்றுது. இதில் கலந்துகொண்ட தர்மலிங்கம் சுரேஸ்  உரையற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 21 கிராமங்கள் இருக்கின்றது. இருந்தபோதும் இந்த கிராம மக்கள் அரசியல் ரீதியாக ஒரு இருண்ட யுகத்துக்குள் இருக்கின்றார்கள். இந்த மக்களுடைய நிலைப்பாடு தொடர்பாக யாரும் கரிசனை கொள்ளவில்லை

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களின் அவலங்களை வெளிநாடுகளிலுள்ள புலம்பெயந்த மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ஊடகங்கள் மூலமாக பிரச்சனைகளை தெரிவித்து வருகின்றோம். அந்த அடிப்படையில் எங்கு அநியாயம் நடக்கின்றதே அந்த இடத்தில் குரல் கொடுக்க தவறமாட்டோம்.

அதேவேளை இந்த படுவான்கரையைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையில் நான் உரிமையுடன் உங்களுடன் பேசமுடியும் எதிர்காலங்களில்; உங்களுக்காக நான் எங்கு சென்றாலும் குரல் கொடுப்பேன். எனவே நாங்கள் யாருக்கும் பயந்து வாழக்கூடாது .
6 கோடி தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்த இலங்கைத் தீவிலே வாழுகின்ற தமிழர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தாலும் தேசிய தலைவர் நாங்கள் ஒரு வீரம் செறிந்தவர்கள் என்பதை தமிழ் மக்களுக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியதுடன் இன்றைக்கு  ஐக்கிய நாடுகள் வரை கொண்டுபோய் எங்களுடைய விவகாரங்கள் சர்வதேச மட்டத்தில்  பேசக்கூடிய அந்த நிலையை தலைவர் ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கு மாற்று கருத்து இல்லை

அதேபோன்று நாங்களும் அவர்கள் அரசியல் ரீதியாக பல பேச்சுவார்த்தைகளில் முன்வைத்த கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டு செல்வதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கைத்தீவில் முதலாவது அணியாக இருக்கின்றது. அதேவேளையில் அரசாங்கத்திற்கு முற்றுமுழுதாக இந்த நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றதுடன் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் தமிழ்மக்களுடைய பிரச்சனைகளை தெரிவித்து வருகின்றோம் . ஆனால் ஏனைய தமிழ் தலைமைகள்  அரசோடு ஒத்து ஒடுகின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வருடாந்தம் 8 கோடி ரூபா வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. கடந்த 3 வருடங்களில் 24 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது 

இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. பல பாதிப்புக்கள் இந்த மக்களுக்கு ஏற்பட்டது. அதேவேளை வடக்கு- கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். யாருக்காவது ஏதாவது செய்திருக்கின்றார்களா? நாங்கள் குற்றம் செல்லவில்லை. ஆனால் இந்த விடயங்களை வெளியில் கொண்டு வருகின்றோம்

இன்று சிங்கள பெரும்பான்மை மக்கள் தங்களுக்கு விருப்பமான தலைவரை கொண்டுவர நினைத்தாலும் அது நடக்காது. ஏன் என்றால்  இந்த தமிழ் மக்களின் போராட்டத்தையும் இந்த இலங்கையின் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிப்பது வெளிநாட்டு சக்திகள்


50 ஆயிரம் மாவீரர்கள் இந்த மண்ணிலே புதையுண்டுள்ளனர், 4 இலச்சம் மக்கள் முள்ளிவாய்க்கால் வரைக்கும் விடுதலைப் போராட்டத்திற்காக இழந்திருக்கின்றோம், ஆகவே எங்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் உரிமை வெளிப்படையாக பேசப்படவேண்டும்.

இந்த போராட்டத்தில் பல துரோகங்கள் நடைபெற்றிருக்கின்றது நீங்கள் நம்பி வாக்களித்தவர்கள் ஆட்சியாளர்களோடு சேர்ந்திருக்கின்றனர். கடந்த 70 வருடகாலமாக இங்கு நடந்த போராட்டத்தில் இலச்சக்கணக்கில் உயிர்களையும்   சொத்துக்கள் என பல இழப்புக்கழை இழந்திருக்கின்றோம்.

எனவே தமிழ் மக்களை பாதுகாக்கப்படவேண்டும் என்றால் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும். இறையாண்மை அங்கீகரிக்கப்படவேண்டும் அதற்கு ஒரே ஒருவழி சர்வதேச விசாரணை வேண்டும்

கிழக்கில் தமிழ் மக்களுடைய வாழ்வு கேள்விக்குறியாக இருக்கின்றது. அந்த நிலையை ஏற்படுத்தியது யார் என்பதை சரியாக விளங்கிகொள்ள வேண்டும். காலம் சரியாக பதிலை சொல்லும் .எனவே இனிவரும் காலங்களில் சிந்தித்து செயற்படவேண்டும்.   

எங்கள் உரிமை போராட்டம் அங்கீகரிகப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரப்படவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் கிழக்கில் இருந்து துடைத்தெறியப்படுவோம்

விடுதலைப்புலிகள் துடைத்தெறியப்பட்டுள்ளார்கள். என்று சொன்னால் அதற்கு காரணம் பூகோள அரசியலில் ஏற்பட்ட மாற்றம் தான். உலக நாடுகளின் நலன் காரணமாக புலிகள் தூக்கி எறியப்பட்டனர். அதுபோன்று எங்கள் மக்களை அடியோடு அழிக்கத்தான் சிங்களதேசம் இருக்கின்றது

இன்று சிங்கள அரசியல் தலைமைகளை பாதுகாப்பதற்காக தமிழ் தலைமைகள் நீதிமன்றத்திற்கு போகின்றார்கள் .ஆனால் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக யாரும் நீதிமன்றத்திற்கு போகவில்லை என்பது வேடிக்கையான விடயம்.

இன்று நீங்கள் ஒரு இருண்ட யுகத்தில் இருக்கின்றீர்கள். உங்களை மடையர்கள் என்ற கோணத்தில் இங்கிருக்கின்ற அரசியல் தலைவர்கள் பார்க்கின்றனர். எனவே நீங்கள் அதற்கு உடந்தையாகக் கூடாது 

உங்களால் இயன்றளவு தியாகம் செய்து பிள்ளைகளை படிப்பிக்கவும் இவ்வாறு படிப்பிப்பதன் மூலம் தான் இப்படிப்பட்ட மடையர்களில் இருந்து விடுவிக்கலாம். இல்லாவிடில் நாங்கள் 5 ,10 வருடத்தில் முழுப்பேரும் அழிந்துபோய்விடுவோம்
கிழக்கை விட்டுக் கொடுக்க கூடாது என .நாடுகள் சபையில் சென்று எமது தலைவர் கஜேந்திரகுமார் குரல் கொடுக்கின்றார். தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களின் பாதுகாப்புகவசம்.


2009 முள்ளிவாய்காலுடன் தமிழ் மக்களின் தேசியசிந்தனை  எல்லாம் முடிந்தது என கனவு கண்டார்களுக்கு எல்லாம் நாங்கள் இன்று சிம்ம சொப்பனமாக இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.  

Description: https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7